உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாம்!
உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சர்க்கரை நோய் மருத்துவ முகாம் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இந்த முகாமில் சர்க்கரை நோய் அறிகுறிகளான அதிக தாகம்,அதிக பசிஎடுத்தல், உடல் எடை குறைதல், தூக்கமின்மை, காயம் ஆறாமல் இருப்பது, உடல் சோர்வு, சிறுநீர் கழிப்பது, படபடப்பு, பார்வை குறைபாடு, கை மற்றும் கால்களில் மதமதப்பு, எரிச்சல் உணர்வு போன்ற அறிகுறி உள்ள நோயாளிகளுக்கு சர்க்கரை நோய் மற்றும் பொது மருத்துவர் ரினுசித்ரா ஆலோசனைகள் வழங்கினார். இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர் இதில் 30 பேர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர். மேலும் இம் மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை இரத்த சுத்திகரிப்பு(டயாலிசிஸ்) பலதுறை அறுவை சிகிச்சைகள்,24 மணி நேர வயிறுஅறுவை சிகிச்சைகள் மற்றும் லேப்ராஸ்கோப்பி/ லேசர் அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறது.