திருச்சி KLA அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவச கணினி குறியீட்டு முகாம்…!
திருச்சி காஜாமலை காலனியில் KLA அறக்கட்டளை மற்றும் சென்னை சார்ந்த TECH DIVA FOUNDATION இணைந்து கணினி குறியீட்டு ஆய்வகத்தை தொடங்கி செயல்பட்டு வருகிறது.மேலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 7,8 மற்றும் 9 ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு இலவச கணினி குறியீட்டு முகாம் வருகிற டிசம்பர் 9 முதல் 13ம் தேதி வரை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை KLA அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இம்முகாமில் அடிப்படை மட்டத்திலிருந்து குறியீட்டு முறையை (CODING) கற்றுக் கொள்வது நல்ல வாய்ப்பாகும். இது நம் மாணவர்களுக்கு படிப்பு மற்றும் ஆக்கப்பூர்வமான சிந்தனைக்கு உதவுகிறது. பள்ளி வகுப்புகள் முடிந்த பின்னரே நடத்தப்படும் இந்த குறியீட்டு முகாமிற்கு மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 99527 39042 எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.