நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவசமாக கார் ஓட்டுநர் பயிற்சி-தமிழக அரசு அறிவிப்பு!

- Advertisement -

0

தமிழக அரசு ஒவ்வொரு துறையின் கீழ் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு மக்களுக்கு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ்  இலவசமாக கார் ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 45 நாள் இலகுரக வாகனம், கனரக வாகனம் மற்றும் 30 நாள் போர்க்லிப்ட் ஆபரேட்டர் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு படித்தி ருக்க வேண்டும். அவர்கள் இந்த திட்டத்தின் கீழ் கார் ஓட்டுநர் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். முதற்கட்டமாக இந்த திட்டத்திற்காக தஞ்சை, மறைமலைநகர் மற்றும் செங்குன்றம் ( ரெட்ஹில்ஸ்) ஆகிய இடங்களில் பயிற்சி இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

வரும் நாட்களில் இந்த திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் உள்நாட்ட மற்றும் சர்வதேச அளவில் வாகன ஓட்டுனர் வேலைவாய்ப்புகளை பெற இந்த பயிற்சி பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று தமிழக அரசு நம்புகிறது. தகுதியுள்ள பயனாளிகள் அரசின் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.இந்த திட்டங்கள் மற்றும் பிற திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள www.naanmudhalvan.in.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Leave A Reply

Your email address will not be published.