நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை எதிர்த்து திருச்சியில் விவசாயிகள் திருவோடு ஏந்தி போராட்டம்!

- Advertisement -

0

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருவோடு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தப் போராட்டத்தில் விவசாயிகளை அழிக்கக்கூடிய கார்ப்பரேட் நிறுவனங்களை பாதுகாக்க கூடிய இந்த நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும். இந்தச் சட்டம் விவசாயிகளை பிச்சை எடுக்க வைக்கும் இந்தச் சட்டத்தால் விவசாயிகள் நிலத்தை இழந்து பிச்சை எடுக்கும் நிலைமைக்கு தள்ளப்படும்.

- Advertisement -

எனவே இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பூ விஸ்வநாதன் தலைமையில் தமிழக அரசை வலியுறுத்தி விவசாயிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.