சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இயந்திரங்கள் மூலம் நெல் நடவு நிகழ்ச்சியை பார்வை யிட விவசாயிகளுக்கு அழைப்பு!

- Advertisement -

0

திருச்சி சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம், கரும்பு ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நெல் நடவு இயந்திரங்கள் மூலம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதைக் காண விரும்பும் விவசாயிகள் இன்று சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை கரும்பு ஆராய்ச்சி நிலையம்/ வேளாண் அறிவியல் நிலைய வளாகத்தில் நடைபெறும் இந்த இயந்திரமயமாக்கல் நடவினை பார்த்து சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
இன்று கலந்து கொள்ள வாய்ப்பு இல்லாதவர்கள் அக்டோபர் நான்காவது வாரத்தில் மீண்டும் நடவு நடைபெறும் அப்போது கலந்து கொண்டு பயன் பெற திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சி. ராஜாபாபு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் விபரங்களுக்கு
தொலைபேசி -0431 2962854 / 9171717832 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Leave A Reply

Your email address will not be published.