சுரண்டையில் பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இன்று கண் தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.பேரணியை தென்காசி எம்எல்ஏ எஸ். பழனி நாடார் துவக்கி வைத்தார் அரவிந்த் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் மீனாட்சி கண் தானம் குறித்து பேசினார் டாக்டர பொன்ராஜ், நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன், சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், சப் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் மேனன், ஒய்எம்சிஏ கண் தான இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜகுமார், நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால்,அன்னலட்சுமி இன்ஸ்டியுட் வைரமுத்து, சாந்தி ஐஏஎஸ் அகாடமி ரமேஷ், கோபி அரவிந்த் கண் மருத்துவமனை பிஆர்ஒ சாரதா, சுரண்டை வத்தல் வியாபாரிகள் சங்க நிர்வாகி ரத்தினசாமி, ஆறுமுகா ஐஏஎஸ் அகாடமி சண்முகவேல், சுரண்டை புத்தக திருவிழா ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.