ஆசிய நாடான சிங்கப்பூரில் அமைச்சராக இருந்தவர், இந்திய வம்சாவளி ஈஸ்வரன், 62. மிக நீண்ட அரசியல் அனுபவம் உள்ள இவர், அமைச்சராக இருந்தபோது 2.60 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுகளை வாங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.இவர் தன், 60வது பிறந்த நாளைக் கொண்டாடியபோது, இசை நிகழ்ச்சி, கார் பந்தய, கால்பந்து போட்டிக்கான டிக்கெட்டுடன், மது வகைகள், சைக்கிள் போன்றவற்றையும் பரிசாக வாங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, இதை அவர் ஒப்புக் கொண்டார். அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதன்படி, சிங்கப்பூர் சிறை சேவை அதிகாரிகளால் அவர் நேற்று சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய பாதுகாப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் வைத்து, தனி சிறை ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இது, 74 சதுர அடி பரப்பளவு உள்ளது; ஒரு பாய், இரண்டு போர்வைகள் வழங்கப்படும். வாரத்தில் இரண்டு முறை குடும்பத்தாரை சந்திக்கலாம். மேலும், நான்கு மின்னணு கடிதத்தை அனுப்பலாம்.