இன்றைய அவசர காலகட்டத்தில் மின்சாரம் என்பது முக்கியமானதாக கருதப்படுகிறது. உணவு சமைப்பது முதல் அலுவலக பயன்பாடு வரை அனைத்துக்கும் மின்சாரம் தேவைப்படுகிறது. கோடையை சமாளிக்க ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது இரு ஏசிக்கள் உள்ளன. அது போல் குளிர் பிரதேசங்களில் ஹீட்டர்களும் உள்ளன.இதனால் பெரும்பாலானோர் வீடுகளில் ஆயிரக்கணக்கில்தான் மின் கட்டணம் கட்டுகிறார்கள். யூபிஐ வசதிகளையும் கம்ப்யூட்டரையும் பயன்படுத்தத் தெரியாத சிலர் மின்வாரிய அலுவலகத்திற்கே போய் மின் கட்டணத்தை செலுத்துகிறார்கள். இந்த நிலையில் ரூ 5000-க்கு மேல் மின் கட்டணம் வந்தால் மின்சார வாரிய அலுவலகத்தில் உள்ள கவுன்ட்டரில் கட்ட முடியாத படி மின்சார வாரியம் புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
மின்சார கட்டணம், பால் கட்டணம், கேபிள், போன் கட்டணம் உள்ளிட்டவற்றை யூபிஐ மூலமும் இன்டர்நெட் பேங்கிங் மூலமும் செலுத்தி வருகிறார்கள். இதனால் டிஜிட்டல் இந்தியா என்பது பெரும்பாலான இடங்களில் சாத்தியமாகி வருகிறது. ஆரம்பத்தில் எல்லாவற்றுக்கும் பணம் செலுத்தி வந்த நிலையில் தற்போது பெட்டிக் கடைகளில் கூட யூபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி உருவாகி உள்ளது.