திருச்சி தில்லைநகர் ராயல் பேர் மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை இலவச பரிசோதனை மூகாம் நடைபெற்றது.இம் முகாமில் காதில் சீழ் வடிதல், காது கேளாமை, சைனஸ், தைராய்டு, குறட்டை, சிறுவர்களுக்கு காது கேளாமை, மூளையின் அடிப்பகுதியில் உள்ள கட்டிகள் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனை அளிக்கப்பட்டது. மேலும் இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் இலவசமாக மருத்துவ பரிசோதனை,மருந்து, மாத்திரை வழங்கப்பட்டன.
முகாமில் 340 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.இதில் 27 பேருக்கு மிக குறைந்த செலவில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. 12 பேருக்கு மேல் குறைந்த விலையில் காது கேட்கும் கருவி வழங்கப்பட்டது என டாக்டர் டி. என். ஜானகிராம் தெரிவித்தார்.இம்முகாமை டாக்டர் டி. என். ஜானகிராம் குழுவினர், டாக்டர் ஷில்பி பாட்டையா, டாக்டர் சௌமியா, டாக்டர் மானசி ஆகியோர் பரிசோதனை செய்தனர்.