சிஎம்சி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் துரை தயாநிதி!

- Advertisement -

0

பிரபல தொழிலதிபராகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து வந்த , கடந்த டிசம்பர் மாதம் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த நிலையில், சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்பல்லோ மருத்துவமனையில் துரை தயாநிதியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையிலுள்ள ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதை உறுதி செய்து, உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அதன் பின்னர் அப்பல்லோ மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்த துரைதயாநி மேல் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதியை இரண்டு முறை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்துவிட்டு வந்தார்.

- Advertisement -

இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த துரை தயாநிதி துரை தயாநிதி  இருந்து இன்று காலை 10.30 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவரை மு.க.அழகிரியும், குடும்பத்தினரும் அழைத்துச் சென்றனர். முன்னதாக துரை தயாநிதியைப் புகைப்படம் எடுக்க விடாமல் மருத்துவமனை ஊழியர்கள் செய்தியாளர்களை வழிமறித்ததால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

 

 

 

Leave A Reply

Your email address will not be published.