கம்பரசர் பேட்டை தலைமை நீர் பணி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி நாளை நடைபெற உள்ளது. இதனால் மலைக்கோட்டை மரக்கடை, விறகுபேட்டை, கண்டோன்மென்ட், தில்லைநகர், கருமண்டபம் ,மிளகு பாறை, அரியமங்கலம், திருவெறும்பூர், காவிரி நகர் ,சந்தோஷ் நகர் ,காஜா பேட்டை, அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் (11.09.2024) ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையர் வே.சரவணன் தெரிவித்துள்ளார்.