திருச்சி ராயல் பேர்ல் மருத்துவமனையில் மூளையில் அடிபட்ட வாலிபருக்கு நவீன அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்த டாக்டர் ஜானகிராமன் மற்றும் மருத்துவ குழுவினர்…!
திருச்சி,தில்லை நகர் ராயல் பேர்ல் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜானகிராமன் அமெரிக்காவில் காது, மூக்கு, தொண்டை மற்றும் ஸ்கல் பேஸ் அறுவை சிகிச்சை பயிற்சி பெற்று, பல நாடுகளில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து வருகிறார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு சட்டீஸ்கர் மாநிலத்தில் இருந்து அகர்வால் (வயது 27 )என்ற வாலிபர் மூளையில் அடிபட்டு மயக்கம் அடைந்தார். உடனே அங்குள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அந்த மருத்துவமனையின் நரம்பியல் மற்றும் காது மூக்கு அறுவை சிகிச்சை நிபுணர் திருச்சியில் இருக்கும் ராயல் பேர்ல் மருத்துவமனையை பரிந்துரை செய்தார். நோயாளி மயக்க நிலையில் இருந்த காரணத்தினால் ரயில் மூலமாகவோ விமானம் மூலமாகவோ இங்கு வர இயலாது என்பதால், தனி ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலமாக திருச்சியில் இருக்கும் ராயல் பேர்ல் மருத்துவமனைக்கு கொண்டுவர ஏற்பாடு செய்தனர்.
நவீன அறுவை சிகிச்சை பின்னர் உடனடியாக ஆம்புலன்ஸ் வேன் மூலமாக அகர்வாலை மேற்கண்ட மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பின்னர் டாக்டர் ஜானகிராமன் தலைமையில் நரம்பியல் நிபுணர் டாக்டர் விஜயகுமார்,மயக்க டாக்டர் பாலமுருகன், கண் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கணேஷ், மற்றும் இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெயசங்கர்,டாக்டர் விக்னேஷ்வர், டாக்டர் சந்திரசேகர்,டாக்டர் சில்பி, டாக்டர் மான்சி குழுவினர் அவருக்கு உடனடியாக பரிசோதனை மேற்கொண்டு அறுவை சிகிச்சை செய்தனர். இதை யடுத்து மறுநாளே மயக்க நிலையில் இருந்து இயல்பு திரும்பினார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜானகிராமன் கூறும் போது, எமது மருத்துவமனைக்கு வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிகமான நோயாளிகள் வருகை தருகிறார்கள்.நான் இதுவரை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மட்டுமல்லாமல் உலகின் 27 நாடுகளுக்கு சென்று ஸ்கல் பேஸ் அறுவை சிகிச்சை செய்துள்ளேன்.இந்த அறுவை சிகிச்சை திருச்சி கிடைத்த பெருமை. இன்றைக்கு சட்டீஸ்கர் மாநில வாலிபர் அகர்வால் நலமுடன் உள்ளார். மீண்டும் அவரது மாநிலத்திற்கு ஓரிரு நாட்களில் செல்ல இருக்கிறார்.நான் 2000க்கும் மேற்பட்ட ஸ்கல் பேஸ் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மருத்துவமனை முதன்மை செயல் அலுவலர்கள் சோமசுந்தரம், வியாகுல மேரி மற்றும் ஆப்ரேஷன் செய்த டாக்டர் குழுவினர் உடன் இருந்தனர்.