விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் 8 நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவது வழக்கம்.புரட்டாசி மாத பெளர்ணமியையொட்டி சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அதன்படி, பிரதோஷம் மற்றும் பெளர்ணமியை முன்னிட்டு கடந்த 15ஆம் தேதி முதல் 4 நாட்கள் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சதுரகிரி கோயிலுக்கு காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டுமே செல்ல அனுமதி எனவும், இரவில் மலையில் தங்குவதற்கு அனுமதி இல்லை எனவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.