பெண்கள் மீது நடக்கும் வரும் குற்றங்களை தடுத்து நடவடிக்கை எடுக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்…!
திருச்சி திருவெறும்பூர் என்ஐ டி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த கதிரேசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் பணியில் ரத்தினம் போக்கை காட்டிய அதோடு ஆடை தான் பிரச்சனைக்கு காரணம் என்று கூறிய விடுதி காப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க கூறியும் மத்திய மாநில அரசு பெண்கள் மீது நடக்கும் வரும் குற்றங்களை தடுத்து நடவடிக்கை எடுக்க கோரி துவாக்குடி அரசு கலைக்கல்லூரி அருகே உள்ள பேருந்து நிலையத்தில் இந்திய மாணவர் பெருமன்றம் அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சங்கத்தினர் கண்டன கோஷம் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.