பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து திருச்சி மாவட்டம் எஸ்டிபிஐ கட்சி சார்பில் பாலக்கரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் தமிழ் அன்சாரி வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் அசாருதீன் வரவேற்றார். சட்டமன்ற தலைவர்கள் ஷேக் முகமது, சபியுல்லா ஆகியோர் கண்டன கோஷம் எழுப்பினர். எஸ் டி பி ஐ கட்சி தமிழ் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீத், திருச்சி அதாயி அரபி கல்லூரி குடும்பத்தின் தாளாளர் முகம்மது பைசூல் பாரி, விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் மெஹராஜ் பானு ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்.
மாவட்ட பொதுச் செயலாளர் முகமது சித்தீக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் பிச்சைக் கனி, SDTU மாநில செயலாளர் முகம்மது ரபிக், மாவட்டச் செயலாளர்கள் ஜமால் முகம்மது, தளபதி அப்பாஸ், ஏர்போர்ட் மஜீத், மாவட்ட பொருளாளர் நியாமத்துல்லா, மாவட்ட செய்தி தொடர்பாளர் பக்ருதீன் மற்றும் தொகுதி, கிளை நிர்வாகிகள்,விமன் இந்தியா மூவ்மென்ட் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இறுதியில் மேற்கு தொகுதி தலைவர் சையது முஸ்தபா நன்றியுரை கூறினார்.