தீபாவளி போனஸ் கேட்டு மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் விடிய, விடிய போராட்டம்…!

- Advertisement -

0

திருச்சி மாநகராட்சியில் தனியார் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் தீபாவளி போனஸ் கேட்டு நேற்று முன்தினம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். விடிய, விடிய நடந்த போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது. இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு வரும்படி அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். பேச்சு வார்த்தைக்கு நிர்வாகிகள் சென்றபோது தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் ஒப்பந்த ஊழியர்களிடம் பேச ஆரம்பித்தனர். இதை அறிந்த பேச்சுவார்த்தைக்கு சென்ற நிர்வாகிகள் உடனடியாக மீண்டும் திரும்பி வந்தபோது தனியார் நிறுவனத்தின் ஊழியர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிறகு அதிகாரிகள் துப்புரவு பணியாளர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி தீபாவளி போனசாக ரூ.1,000 தருவதாக கூறினர். இதற்கு மறுப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நேற்று நள்ளிரவிலும் தொடர்ந்தது.

Leave A Reply

Your email address will not be published.