திருச்சி சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நாளை நடக்கிறது!
திருச்சி சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் பல்வேறு பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுபவர்கள், இயற்கை இடுபொருட்களை தயாரிப்பவர்கள் மற்றும் சந்தைப்படுத்துபவர்களை ஒருங்கிணைத்து இயற்கை வேளாண்மை கருத்தரங்கு மற்றும் கண்காட்சி ஒவ்வொரு மாதமும் முதல் வாரம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டு வருகிறது.மூன்றாம் நிகழ்ச்சி நாளை ( 03.12.2024-செவ்வாய்க்கிழமை) அன்று நடைபெற உள்ளது. இக்கருத்தரங்கில் இயற்கை வேளாண்மை, இயற்கை இடுபொருட்கள் தயாரித்தல், சத்துமிகு காய்கறி தோட்டம், இயற்கை பொருட்களை சந்தைப்படுத்துதல் போன்ற தலைப்புகளின் கீழ் தொழில்நுட்ப வல்லுநர்களால் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட உள்ளது.
மேலும் இயற்கை இடுபொருள்களை சந்தைப்படுத்துவதற்கும், அவற்றை விவசாயிகளுக்கு எளிதில் கிடைக்கச் செய்யும் வகையிலும் இயற்கை இடுபொருட்கள் உற்பத்தி செய்பவர்கள் மூலம் கண்காட்சி அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு இயற்கை இடுபொருட்களை வாங்குவதற்கான வாய்ப்பினை எளிதாக்குவதோடு இடுபொருட்களை விவசாயிகளிடம் சந்தைப்படுத்துவதில் பெரிதும் உதவுகிறது.ஆர்வமுள்ள இயற்கை விவசாயிகள், இயற்கை இடுபொருள்கள் தயாரிப்போர் மற்றும் சந்தைப்படுத்துவோர் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொழில்நுட்பங்கள் மற்றும் இடுபொருட்கள் பற்றிய தகவல்களை தெரிந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் விவரங்களுக்கு 04312962854, 9171717832 / 9080540412 என்ற எண்ணை அலுவலக நேரத்தில் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை) தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சி.ராஜா பாபு தெரிவிக்கிறார்.