திருச்சியில் ரியல் எஸ்டேட் தொழிலாளர்கள் மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம்:மாநில நிர்வாகிகள் பங்கேற்பு!

- Advertisement -

0

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் சங்கம் சார்பில் ரியல் எஸ்டேட் தொழிலாளர்கள் மாநில மாநாடு குறித்த கிழக்கு மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்நிகழ்வில் மாநில தரகர்கள் நல சங்கத்தின் பொருளாளர் டயர் சரவணன் தலைமை வகித்தார். திருச்சி மாவட்ட தலைவர்கள் சத்தியசீலன், முகமது மீரா, கண்ணன், டைல்ஸ் திருமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

- Advertisement -

மாவட்டச் செயலாளர்கள் முத்து ஜெயக்குமார், ஜோசப், கார்த்திக், சார்லஸ் சாக்ரடீஸ், கண்ணன், மாவட்ட பொருளாளர்கள் மணிகண்டன், சிவக்குமார், தர்மர், கலைச்செல்வன் ஆகியோர் வரவேற்றனர். சங்கத்தின் தலைவர் டாக்டர் கண்ணன் சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் அகில இந்திய செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் சரவணன், துணைத்தலைவர் அன்னை சரவணன், துணை செயலாளர் கே.சரவணன், மாநில அமைப்பாளர் சுப்பிரமணி ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.கூட்டத்தில் அன்னை கேட் இன்ஜினியர் மரிய பிரான்சிஸ், மாநிலத் துணைத் தலைவர் வி.பி.சுரேஷ் குமார், விழுப்புரம் ஹக்கீம் உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர். முடிவில் சரவணன், சதீஷ்குமார், சின்னப்பன் ஆகியோர் நன்றி கூறினர்.கூட்டத்தில் ஆலோசித்து பல்வேறு முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன

Leave A Reply

Your email address will not be published.