மாநில அளவிலான 38-வது ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஈரோட்டில் நடந்தது. இதில் திருச்சி மாவட்டத்தில் இருந்து 136 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டிகளின் முடிவில் திருச்சி அணியினர் 14 பிரிவுகளில் பதக்கம் வென்றனர். ஒட்டுமொத்த சாம்பியனில் திருச்சி மாவட்ட அணியினர் 6-வது இடத்தை பிடித்தனர்.
இந்நிலையில் பதக்கம் வென்ற வீரர்-வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் ராஜூ தலைமை தாங்கினார். செய்தி தொடர்பாளர் நீலமேகம், தடகள சங்க பொருளாளர் ரவிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தடகள சங்க உபத்தலைவரும், தமிழ்நாடு சிறப்புப்படை காவல் பட்டாலியன்-1 கமாண்டன்டுமான ஆனந்தன் கலந்து கொண்டு பதக்கம் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்.