வணிக கட்டிடங்களில் வாடகை தொகையோடு 18% ஜிஎஸ்டியை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
நாடு முழுவதும் வணிக கட்டிடங்களில் வணிக செய்து வரும் வணிகர்கள் இனி தாங்கள் செலுத்தும் வாடகை தொகையோடு கூடுதலாக 18 சதவீத தொகையை ஜிஎஸ்டி ஆக செலுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பு வணிகர்களுக்கு இடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. வணிக செய்து வரும் வணிகர்கள் 80 சதவீதம் மேற்பட்டோர் வாடகை கட்டிடத்தில் வணிகம் செய்து வருகின்றனர்.
இந்த அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வருகிற 11.12.2024 (புதன்கிழமை ) மாநிலம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. எனவே திருச்சியில் தலைமை தபால் நிலையம் பின்புறம் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் காலை 10:30 மணி அளவில் மாநில பொதுச் செயலாளர் வீ கோவிந்தராஜுலு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் மாநில, மண்டல, மாவட்ட, மாநகர, கிளை சங்கங்கள் மற்றும் மாவட்ட மாநகர இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கம் பேரமைப்பு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.