சீன நாட்டின் ஜியான்சு மாகாணத்தில் டாய்க்சிங் நகரில் ஒரு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் ஜங் என்னோட பேர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்துள்ளார். நள்ளிரவு வரை அவருக்கு வேலை அதிகமாக இருந்தது. இதனால் ஆபீஸில் தனது மேஜையிலேயே ஒரு மணி நேரம் தூங்கி உள்ளார். இதனை சிசிடிவி கேமராவில் பார்த்த மேல் அதிகாரிகள் ஜாங்கை டிஸ்மிஸ் செய்தனர். HR டிபார்ட்மென்ட் வேலையின் போது நெறிமுறைகளை மீறிய தாக கூறியது. நிறுவனத்தின் செயலை கண்டித்து ஜாங் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ஜூ குய் பணியிடத்தில் தூங்கியதால் நிறுவனத்திற்கு எந்த தீங்கும் விளைவிக்கவில்லை. ஜாங் அந்த நிறுவனத்திற்காக 20 ஆண்டுகளாக உழைத்துள்ளார். அவருக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வு வழங்க விரும்பாததால் நிறுவனம் அவரை பணி நீக்கம் செய்ததாக தெரிகிறது. இது நியாயமற்றது. ஜாங்கிற்கு 41.6 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.