மராத்தி உட்பட 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து:மத்திய அமைச்சரவை ஒப்புதல் !

- Advertisement -

0

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மராத்தி உட்பட 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கி இருப்பதாகவும்,இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.ஒரு மொழியை செம்மொழி என்று அறிவிக்கப்படும் பொழுது மொழியின் காலம் மற்றும் அதன் இலக்கண, இலக்கிய அமைப்பு உள்ளிட்ட பல்வேறு மொழியியல் அம்சங்களை கணக்கிட்டு ஒரு மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்படுகிறது.அந்த வகையில் உலகம் முழுவதும் ஒரு சில மொழிகளே செம்மொழியாக அங்கீகாரம் பெற்றுள்ளன.மேலும் இந்தியாவில் தேசிய அளவில் மத்திய அரசால் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய மொழிகள் ஏற்கனவே செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது மேலும் மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமிஸ், பெங்காலி போன்ற 5 மொழிகளை செம்மொழியாக அங்கீகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.செம்மொழி அந்தஸ்து குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் வளமான வரலாறு மற்றும் கலாச்சாரத்தை எங்கள் அரசாங்கம் போற்றி கொண்டாடுகிறது.அந்த வகையில் பிராந்திய மொழிகளைப் பிரபலப்படுத்துவதில் எங்களின் அர்ப்பணிப்பிலும் நாங்கள் அசையாது இருக்கிறோம் என்றும்,அசாமிஸ், பெங்காலி, மராத்தி, பாலி மற்றும் பிராகிருத மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.இதனையடுத்து அவை ஒவ்வொன்றும் அழகான மொழிகள், நமது நாட்டின் துடிப்பான பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டுகின்றன என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.