ஜமால் முகமது கல்லூரியில் குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி ஆசிரியர்கள் பயிற்சி நடைபெற்றது…!

- Advertisement -

0

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சென்னை கணித அறிவியல் நிறுவனம், ஜமால் முகமது கல்லூரி கணிதத்துறை, தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் இணைந்து ஜமால் முகமது கல்லூரியில் குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி ஆசிரியர்கள் பயிற்சி நடைபெற்றது.மாணவர்கள் மத்தியில் அறிவியல் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் குழந்தைகள் அறிவியல் மாநாட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தி வருகிறது. அந்த வகையில், நிகழாண்டில் நீர் மேலாண்மை என்ற கருப்பொருளைக் கொண்டு ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கும் குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்தப்படவுள்ளது.6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் தங்களது ஆய்வு கட்டுரைகளை தாங்கள் பயிலும் பள்ளியின் வழிகாட்டி ஆசிரியர்களுடன் சமர்ப்பிப்பார்கள்.

- Advertisement -

பயிற்சி அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் ஜான்சன் பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்றது. ஜமால் முகமது கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் டாக்டர்.ஏ.கே.காஜா நஜீமுதின் பங்கேற்று தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் மு.மணிகண்டன் அறிமுகவுரையாற்றினார். துணை முதல்வர் ஜாஹிர் உசேன், மாநிலச் செயலாளர் மு.மாணிக்கத்தாய், மாவட்ட துணைத் தலைவர் சிவ.வெங்கடேஷ், மாவட்ட இணைச் செயலாளர் க.பகுத்தறிவன் வாழ்த்துரை வழங்கினார்கள். முதலில், ஒருங்கிணைப்பாளர் து.காந்தி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.பேராசிரியர்கள் ஆ.பிரசன்னா, கி.கோபாலன், அருண்விவேக், ஜானி குமார் தாகூர், மு.சலாஹுதீன் ஆகியோர் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். நிறைவில், குழந்தைகள் அறிவியல் மாநாடு மாநில ஒருங்கிணைப்பாளர் மு.தியாகராஜன் நிறைவுரையாற்றினார். மாவட்டத்தின் பல்வேறு ஒன்றியங்களைச் சேர்ந்த 200 ஆசிரியர்கள் பயிற்சியில் பங்கேற்றனர். கல்வி ஒருங்கிணைப்பாளர் மு.அ.ரிபாயத் அலி நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.