விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பலதா, தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி.நீலமேகம் தலைமை வகித்தார். தண்ணீர் அமைப்பின் செயலாளர் கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் கி. சதீஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தைகள் தினத்தில் குழந்தைகளை பாராட்டிப் பேசினார். குழந்தைகளுக்கான உலகம் அவர்ளுக்கான வாழ்வு அவர்ளுக்கான நிலம் அவர்களுக்கான சூழலியல் அவர்களுக்கான இயற்கை வளங்களை அவர்களுக்கான ஊட்டச்சத்து மிகுந்த உணவு நல்ல எதிர்காலத்தை நல்ல கல்வியை, பாதுகாப்பை நாம் வழங்க வேண்டும் என்றார். நேரு பற்றி தமிழில் ஆங்கிலத்தில் பேசி அசத்திய குழந்தைகளுக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு குழந்தைகளுக்கு முன்னிட்டு பனை விதைகள் வழங்கப்பட்டது. பனைவிதைகளின் சிறப்புகளை பற்றி தெரிவித்து . “மாநில விதை அதை மாநிலம் முழுதும் விதை” என்கின்ற விழிப்புணர்வு மாணவரிடம் ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் திருமதி புஷ்பலதா உமா உள்ளிட்ட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் நேருவின் கவிதை, பாடல், வாழ்க்கை வரலாறு, மாணவர்கள் பேசினார்கள். மாணவர்களுக்கு பஞ்சு மிட்டாய், பாப் கான் அனைத்துக் கொடுத்தார்கள். இதனை பாராட்டி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. தண்ணீர் அமைப்பு சார்பில் பனை விதைகள் கொடுக்கப்பட்டது.