ரூ.3 கோடியில் கால்நடை பன்முக மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்…!

- Advertisement -

0

தூத்துக்குடியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் காணொலிகாட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்ட கால்நடை பன்முக மருத்துவமனையில் அமைச்சர் கீதாஜீவன் திருவிளக்கேற்றி பார்வையிட்டார்.சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மாநகராட்சி புதுக்கிராமத்தில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கால்நடை பன்முக மருத்துவமனையினை காணொளிகாட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

- Advertisement -

இதனைத்தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் திருவிளக்கு ஏற்றி வைத்து, கல்வெட்டை திறந்துவைத்து அலுவலக வளாகத்தினை பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அளித்த அளித்தபேட்டியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றப்பிறகுஅனைத்துத் துறைகளுக்கும் தேவையான கட்டிடவசதி, சாலைவசதி, உட்கட்டமைப்புவசதி, நவீனதொழில்நுட்ப வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மேம்படுத்திட வேண்டும் என்ற நோக்கில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய வகையில் கட்டப்பட்டுள்ள இந்த கால்நடை பன்முக மருத்துவமனையில் பெரிய மற்றும் சிறிய செல்லப்பிராணிகளுக்கான அறுவை சிகிச்சைக் கூடம், குளிரூட்டப்பட்ட தடுப்பூசி மருந்து சேமிப்பு அறை, ஆய்வுக் கூடம், கூட்டரங்கு, மருத்துவர் அறை, உதவி மருத்துவர் அறை, அதுபோல வெளிநோயாளிகால்நடைகளுக்கு சிகிச்சை மேற்கொள்ள ஏதுவாக, வெளிபுறத்தில் அறுவை சிகிச்சைக் கூடமும் அமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சஞ்சீவ்குமார், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மண்டலத்தலைவர் அன்னலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரி தங்கம், கவுன்சிலர்கள் விஜயலட்சுமி, ராஜேந்திரன், வைதேகி, பவானி, பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார் மற்றும் கருணா, மணி, அல்பர்ட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.