இந்திய ஹாக்கி அணியில் பங்கேற்ற கார்த்திக் குடும்பத்தினருக்கு வீடு ஒதுக்கீடு : ஆணையை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் அரியலூரைச் சேர்ந்த எஸ்.கார்த்திக் என்பவர் இடம்பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்திருந்தார். இந்நிலையில், அவரின் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரின் குடும்பத்தினரை சந்தித்து கலந்துரையாடினார். அதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குறும்பஞ்சாவடி திட்டப்பகுதியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையையும் அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார். அருகில் அமைச்சர்கள் கே.என்நேரு,சா.சி.சிவசங்கர், சி.வி.கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.