ஜாபர் சாதிக் மீதான வழக்கில் இயக்குனர் அமீர் உள்ளிட்ட 12 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. போதைப் பொருள் கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் 302 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இதில், ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனா பானு, சகோதரர் முகமது சலீம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கில் பன்னிரண்டாவது நபராக சேர்க்கப்பட்டுள்ள இயக்குனர் அமீர், சட்ட விரோதமாக பணத்தை கையாண்டதாக இந்த குற்றப்பத்திரிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், ஜாபர் சாதிக்கின் சினிமா தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட எட்டு நிறுவனங்களும் இந்த குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. குற்றப் பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் அமலாக்கத்துறை கோரிக்கை வைத்துள்ளது.