ராகுல் காந்தியை தவறாக பேசிய ஹெச்.ராஜா மீது வழக்கு பதிவு : திருச்சி காங்கிரஸ் மலைக்கோட்டை கோட்ட தலைவர் புகார்!

- Advertisement -

0

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்கா சென்றிருந்தபோது இந்திய தேர்தல் நடைமுறை குறித்து பேசி இருந்தார். அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாஜகவை சேர்ந்த தர்மேந்தர் சிங் வர்மா, சிவசேனா சினே பிரிவு கட்சித் தலைவர் சஞ்சய் கோக், உத்தர பிரதேச மாநில அமைச்சர் ரகுராஜ் சிங், மத்திய இணை அமைச்சர் ரவீந்தர் சிங் பிட்டு, தமிழகத்தை சேர்ந்த எச் ராஜா ஆகியோர் ராகுல் காந்தியை தவறுதலாக சித்தரித்து பேசியததை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட மலைக்கோட்டை காங்கிரஸ் கமிட்டி சார்பாக கோட்ட தலைவர்  வெங்கடேஷ் காந்தி  தலைமையில் பொருளாளர் முரளி, வார்டு தலைவர் ரபிக் , 14ஏ ஆரிப், கலைப்பிரிவு ராஜீவ் காந்தி சண்முகம், பாலமுருகன் ஆகியோருடன் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

 

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.