உலக இருதய தினத்தை முன்னிட்டு திருச்சி மாநககர போலீஸ் காவலர்களுக்கு இருதய பரிசோதனை முகாம்!
உலக இருதய தினத்தை முன்னிட்டு மாருதி மருத்துவமனை மற்றும் திருச்சி மாநகர காவல்துறை இணைந்து மாநகர காவலர்கள், அலுவலக பணியாளர்களுக்கு இலவச இருதய பரிசோதனை முகாம் கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது.முகாமை மாநகர் போலீஸ் கமிஷனர் காமினி தொடங்கி வைத்தார்.
மருத்துவமனையின் சிறப்பு இருதய மருத்துவர் கே.கோட்டி தலைமையில் மருத்துவகுழுவினருடன் இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் ஜெனரல் ஹெல்த் செக்அப்,இசிஜி,எக்கோ,இருதய பரிசோதனை மற்றும் இருதய சம்பந்தப்படட அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டடது.இம்முகாமில் 300 க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டனர். அறுவை சிகிச்சை தேவைப்படுவோர் களுக்கு தமிழக அரசு மற்றும் தனியார் மருத்துவ சிகிச்சை காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சை பயன் பெறலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாருதி மருத்துவ நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.