திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் பயன்பெறும் வகையில் பேருந்து வசதி : அமைச்சர் கே. என். நேரு தொடங்கி வைத்தார்..!
இன்று திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம், திருச்சி மண்டலத்தின் சார்பில் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து நேரடியாக பொதுமக்கள் மற்றும் விமான பயணிகள் பயன்பெறும் வகையில் திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம், நம்பர் ஒன் டோல்கேட் வரையிலான பேருந்து இயக்கத்தை இன்று கொடியசைத்து மாண்புமிகு அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப்குமார் இ.ஆ.ப., மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் , மாநகராட்சி ஆணையர் வே.சரவணன் இ.ஆ.ப., அரசு அலுவலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் கலந்து கொண்டனர்.