ரோட்டரி பிளட் டோனர்,ரோட்டரி கிளப் ஜம்புகேஸ்வரர் மற்றும் ரோட்டரி கிளப் திருச்சி நெக்ஸ்ட் ஜென் இணைந்து மாபெரும் ரத்ததான முகாமை நாளை (01.10.2024) பிரண்ட்ஸ் ரத்த வங்கில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு துணை ஆளுநர் ரஞ்சித் வள்ளியப்பன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகமது ஹனிபா மற்றும் சிறப்பு விருந்தினராக ஜோசப் கண் மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி சுபா பிரபு கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை தலைவர்கள் பாரத், ஜெகதீஷ், செயலாளர்கள் சலாவுதீன்,அப்துல் ரஹீம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு ரத்த தானம் செய்ய ரோட்டரி சங்க சார்பில் அழைக்கப்படுகிறது.