விஜயின் GOATபடத்திற்கு பாஜக கடும் கண்டனம்…!

- Advertisement -

0

விஜய் நடிப்பில் வெளியான Goat படத்தில் செல்போன் திருடும் கதாபாத்திரத்துக்கு சுபாஷ் சந்திரபோஸ் பெயரை வைத்ததற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் பிரசாத் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “The Goat திரைப்படத்தில் கதாநாயகன் விஜய்யின் பெயர் காந்தி எனவும், செல்போன் திருடனாக வரும் யோகி பாபுவின் பெயர் சுபாஷ் சந்திரபோஸ் எனவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.இந்திய விடுதலைக்கு வித்திட்ட மாவீரர் சுபாஷ் சந்திரபோஸின் பெயரை இழிவுபடுத்த வேண்டாம்.இது மகாத்மா காந்தியையும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸையும் எதிரெதிரானவர் போல காட்டியிருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.திருடன் கதாபாத்திரத்திற்கு கிண்டலுக்காக கூட நேதாஜி பெயரை பயன்படுத்தியிருக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.மேலும், உடனடியாக விஜய் மற்றும் படக்குழுவினர் யோகிபாபுவின் கதாபாத்திர பெயரை மாற்றவேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.