பாரதிதாசன் பல்கலைக்கழகம் தேர்வு கட்டணத்தை உயர்த்தியை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்!

- Advertisement -

0

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் தேர்வு கட்டணத்தை கூடுதலாக உயர்த்தி ஆணையை வெளியிட்டு இருக்கிறது. திருச்சி, தஞ்சாவூர் திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் மற்றும் கரூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் பெரும்பாலும் ஏழை எளிய விவசாய மற்றும் விவசாயக் கூலி தொழிலாளர்கள் வீட்டு பிள்ளைகளே கல்வி பயின்று வருகின்றனர்.பொருளாதார நெருக்கடிகள் நிலையில் இருக்கும் நிலையில் தேர்வு கட்டணத்தை உயர்த்திருப்பது மாணவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

ஏழை எளிய மாணவர்களுக்கும் உயர் கல்வி எவ்வித தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம், மாணவர்களின் பருவ தேர்வு கட்டணத்தை இந்த ஆண்டு உயர்த்திய நிலையில் அதனை உடனடியாக செலுத்த வேண்டும் எனவும்  நிர்வாகம் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது.
மாணவர்களின் நலன் கருதி உயர்த்தப்பட்டுள்ள தேர்வு கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் சூரியா தலைமையில் இன்று  காட்டூர் பகுதியில் அமைந்திருக்கக்கூடிய உருமூ தனலட்சுமி கல்லூரியில் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை கண்டித்து முழக்கத்தை மாணவர்கள் முழக்கத்தை எழுப்பினர்.உடனடியாக உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர் .இந்த போராட்டத்தில் UDC கல்லூரி கிளை தலைவர் ஸ்ரீநாத், UDC கல்லூரி கிளைச் செயலாளர் ஹரி மற்றும் 100 மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.