பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான நடைபெற்ற நீச்சல் போட்டி: ஜமால் முகமது கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை பெற்றது…!
திருச்சி, பாரதிதாசன் இனைவு பெற்ற திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுகை, கரூர், ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு இடையிலான மாணவர்களுக்கான நீச்சல் போட்டி திருச்சி அண்ணா விளையாட்டரங்க நீச்சல் குளத்தில் நடைபெற்றது.இதில் 6 கல்லூரிகளிலிருந்து 40க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர்.19 பிரிவின் கீழ் நடைபெற்ற நீச்சல் போட்டியில் ஜமால் முகமது கல்லூரி 14 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கல பதக்கங்களை பெற்று முதலிடம் பிடித்து ஒட்டு மொத்த அணி சாம்பியன் பட்டத்தை பெற்றது.ஜமால் முகமது கல்லூரியை சேர்ந்த மாணவர் டி. சங்கர் 10 தங்க பதக்கங்கள் பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.
கரூர், கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 4 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கல பதக்கங்களை பெற்று இரண்டாவது இடத்தையும்,
1 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கல பதக்கங்களுடன் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரிமூன்றாவது இடத்தையும் பிடிததன.நீச்சல் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற ஜமால் முகமது கல்லூரி வீரர்களை கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் ஏ.கே. காஜா நஜீமுதீன்,பொருளாளர் எம். ஜெ. ஜமால் முகமது, முதல்வர், டி. ஐ. ஜார்ஜ் அமலரத்தினம்,இணை செயலாளர் கே. அப்துஸ் சமது விடுதி இயக்குனர் கே. என். முகமது பாசில்,உடற்கல்வி இயக்குனர் பி.எஸ்.ஷாஇன்ஷா ஆகியோர் பாராட்டினார்.