சென்னையில் நாளை நடைபெற இருந்த வங்கி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் பல இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது . அதனை போல் நாளையும் கனமழை நீடிக்கக்கூடும் எனக்கருதப்படுகிறது.நாளை நடைபெற இருந்த வங்கி தேர்வுகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், புதிய தேதி பிறகு அறிவிக்கப்படும் என்று இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் & ஃபைனான்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.