கண்ணாடியின்றி, அறுவை சிகிச்சையின்றி தீர்வு காண என்டாட் பார்மாடிகல்ஸ் மருந்து நிறுவனத்தின் ‘பிரஸ்வியூ’ கண் சொட்டு மருந்தை பயன்படுத்தலாம் என தெரிவித்தது. இந்த சொட்டு மருந்தை கண்ணில் ஊற்றினால் 15 நிமிடத்தில் வெள்ளெழுத்து பிரச்சினை சரியாகி விடும். அதன்பின் ரீடிங் கிளாஸ் இன்றி பேப்பர் படிக்கலாம் என தெரிவித்தது. இது சர்ச்சைக்கு வித்திட்டது.இந்த சொட்டு மருந்துக்கு சிடிஎஸ்சிஓ ஏற்கெனவே அனுமதி வழங்கி இருந்தது. இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளரின் (டிசிஜிஐ) அனுமதியும் தொடர்ந்து பெறப்பட்டு இருந்தது. இந்தச் சூழலில் சிடிஎஸ்சிஓ அனுமதியை ரத்து செய்துள்ளது. மறு உத்தரவு வரும் வரையில் சம்பந்தப்பட்ட மருந்தை மருந்து நிறுவனம் தயாரிக்க கூடாது என தெரிவித்துள்ளது. மேலும், தவறாக வழி நடத்தப்படுவதற்கான வாய்ப்புள்ள காரணத்தால் மக்களின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாக சிடிஎஸ்சிஓ தெரிவித்துள்ளது.