தமிழகம் முழுவதும் பைக் டாக்ஸி சேவைக்கு தடை:போக்குவரத்து ஆணையர் உத்தரவு!

- Advertisement -

0

இந்தியாவில் வாடகைக்கு டாக்ஸி மற்றும் ஆட்டோக்கள் வரும் நிலையில் தற்போது முக்கிய நகரங்களில் பைக் டாக்ஸியும் இருக்கிறது. அதன்படி பிரபல ரேபிடோ நிறுவனம் பெங்களூரு மற்றும் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பைக் டாக்ஸி சேவையை வழங்குகிறது. இதன் மூலம் ட்ராபிகில் சிக்காமல் எளிதாக போக்குவரத்தை கடந்து செல்ல முடியும் என்பதால் பலரும் விரும்புகிறார்கள். ஆனால் தமிழகத்தில் இருசக்கர வாகனங்களை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதற்கு அனுமதி கிடையாது.

- Advertisement -

இதுவரை தமிழ்நாட்டில் பைக் டேக்ஸி இருந்த நிலையில் தற்போது இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி இருசக்கர வாகனங்களை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்துவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து ஆணையர் அனைத்து ஆர்டிஓ அலுவலகங்களுக்கும் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். மேலும் மோட்டார் வாகன தணிக்கை சட்டப்படி நடவடிக்கை எடுத்து தினசரி சிறப்பு வாகன தணிக்கை மேற்கொண்டு தினசரி இரவு 7:00 மணிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.