திருச்சியில் உலக மருந்தாளுனர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் ஒரு பகுதியாக மருந்தாளுனர்கள் தினத்தை முன்னிட்டு இந்திரா கணேசன் மருந்தியல் கல்லூரி மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சி கிளை சார்பில் பொதுமக்களுக்காக விழிப்புணர்வு பேரணி காந்தி மார்க்கெட் பகுதியில் இருந்து தொடங்கி ஹோலி கிராஸ் கல்லூரி, சத்திரம் பேருந்து நிலையம் வழியாக தெப்பக்குளத்தை வந்து முடிவுற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ரெட் கிராஸ் மாவட்டத் தலைவர் ராஜசேகரன் தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மருந்தியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்றனர்.