உலக பருத்தி தினத்தை முன்னிட்டு பருத்தியில் அதிக மகசூல் பெற சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தின் மூலம் பல்வேறு பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாளை(07.10.2024) திங்கட்கிழமை உலக பருத்தி தினத்தை முன்னிட்டு பருத்தியில் அதிக மகசூல் பெற, பூக்கள் மற்றும் சப்பைகள் உதிர்வதை காய்கள் முழுமையாக வெடித்து சீரான அறுவடைக்கு வழிவகுக்கும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பருத்தி பிளஸ் (பருத்திக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சிக்குகள் கலந்த பூஸ்டர்) விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நாளை முசிறி வட்டாரம் திருத்தலையூர் கிராமத்திலும், தொட்டியம் வட்டாரம் எம் களத்தூர் கிராமத்திலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
எனவே பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு சிறுகமணி வேளாண் அறிவிப்பில் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் . மேலும் விவரங்களுக்கு 04312962854, 9171717832,8838126730 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். மேற்கண்ட தகவல்களை வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சி.ராஜா பாபு தெரிவித்தார்.