திருச்சி கேர் அகாடமியில் சிகரம் நோக்கி என்னும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி வடக்கு ஆண்டாள் தெரு சென்டரில் நடைபெற்றது.விழாவில் மைய இயக்குனரும், பேராசிரியர் முத்தமிழ் செல்வன் தலைமை வகித்தார். இந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தேர்வாணையத்தின் இளநிலை பட்டதாரி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும், நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் சேர இருக்கும் மாணவர்களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது. மேலும் இந்த ஆண்டு நடைபெறுகின்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான PG-TRB, NEET தேர்வு 2024 தேர்வு எதிர்கொள்ளும் மாணவர்களுக்கும் வழிகாட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவில் டாக்டர் இளந்தமிழன் வரவேற்புறை யாட்டினார். டாக்டர் ஆனந்த் கிருஷ்ணன், கிருஷ்ணவேணி, டாக்டர் தமிழன் தமிழன்பன் ஐயோ வாழ்த்துரை வழங்கினர். எழுத்தாளர், இலக்கியவாதியும், பட்டிமன்ற பேச்சாளருமான பாரதி பாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாமானியானாலும் சாதிக்க முடியும். தன்னம்பிக்கை தன்மேல் பிறர் வைக்கும் நம்பிக்கை இவற்றை ஆதாரமாகக் கொண்டு வெற்றி பெற வேண்டும் என சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்த அகடாமி படித்து அரசு மருத்துவ கல்லூரி சேர இருக்கின்ற இரண்டு மாநில சாதனையாளர்கள் உள்பட 23 மாணவர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு வெற்றி பெற்று அரசு பணியில் சேர இருக்கும் 31 ஆசிரியர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சி முடிவில் ஆசிரியர் ரிஷிகேசவன் நன்றி கூறினார். விழாவில் ஏராளமான மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.