திருச்சி நவல்பட்டு பகுதியில் ஆட்டோ டிரைவர் தற்கொலை!

- Advertisement -

0

திருச்சியில் திருவரம்பூர் பூலாங்குடி காலனி பிரதான சாலை பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 39), ஆட்டோ டிரைவர். இவர் சிலரிடம் பணம் கடனாக வாங்கினார். பின்னர் அதனை திரும்ப செலுத்த இயலவில்லை. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான வெற்றிவேல் யாரும் எதிர்பாராத வகையில் போர்வையால் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

- Advertisement -

பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் துவாக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு வெற்றிவேல் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து அவரது மனைவி சாந்தி நவல்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.