தூத்துக்குடி மாவட்டம்,வடக்கு ஆத்தூர், முஸ்லிம் தெருவில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இந்திய நாட்டின் 78 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தேசிய கொடியை பேரூராட்சி மன்ற தலைவர் AK. கமால்தீன்
ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் முத்து, சிவா, அசோக் குமார், பாலசிங், கோமதி, பள்ளி தலைமை ஆசிரியர் க.தேவசகாயம்* மற்றும் ஆத்தூர் ஜும்மா பள்ளியின் நிர்வாகிகள், பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்..