திருச்சி புனித ஜோன் ஆப் ஆர்க் இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்ற பள்ளிகளுக்கிடையேயான போட்டி விழாவில் அறந்தாங்கி நிஷா பங்கேற்பு…!

- Advertisement -

0

திருச்சி அதவத்தூரில் உள்ள புனித ஜோன் ஆஃப் ஆர்க் சர்வதேசப்பள்ளியில் – JOAN FEST – 2024 INTER SCHOOL COMPETITION பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக Dr.S.M.சிவகுமார் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார். பள்ளியின் முதன்மை முதல்வர் இரவிராயன் வரவேற்புரை வழங்கினார். பள்ளியின் தாளாளர் நாகவேணி சந்திரசேகரன் மற்றும் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்து, நினைவு பரிசினை வழங்கினர்.இதனை தொடர்ந்து , (ஆங்கிலம்- தமிழ்) பேச்சு போட்டிகள், ஓவியம், பலவித நடனங்கள், பாட்டு, கிராஃப்ட் ஒர்க், வண்ணம் தீட்டுதல், குறும்படம் தயாரித்தல் போன்று 18 வகையான போட்டிகள் நடைபெற்றது.

- Advertisement -

இத்தகைய போட்டிகளில் திருச்சியைச் சுற்றியுள்ள பள்ளிகளில் இருந்து 1400 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர் மாலை 6.30 மணி அளவில் போட்டிகள் நிறைவுற்றது.விஜய்டிவி புகழ் அறந்தாங்கி நிஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.அவரை பள்ளியின் முதல்வர் ஜெயந்தி வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கினார். மிகுதியான போட்டிகளில் கலந்து கொண்ட பள்ளிக்கு கேடயம் பரிசாக வழங்கப்பட்டது. திருமதி. நிஷா அவர்கள், மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு நகைச்சுவையாக தனது பாணியில் உரையாற்றினார்.இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.