காட்டூரில் ஆசிரியரின் கல்வி சேவையை பாராட்டி முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் பாராட்டு!

- Advertisement -

0

திருச்சி பாப்பா குறிச்சி காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றும்  பாஸ்கர் அவருடைய கல்வி சேவையை பாராட்டி மாவட்ட லயன்ஸ் கிளப் சார்பில் கல்வித் திலகம் பட்டம் வழங்கப்பட்டது.அதற்காக அவரை வாழ்த்தி பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் தலைவர் எஸ் எஸ் ரஹ்மத்துல்லா தலைமையில் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. முன்னாள் மாணவர் சங்கச் செயலாளர் சரவணன் வரவேற்று பேசினார் .பொருளாளர் ரவிச்சந்திரன் ஆசிரியரை வாழ்த்தி பேசினார். இந்நிகழ்ச்சியில் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் பவர் செல்வகுமார் மற்றும் மான்சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.