தமிழகம் முழுவதும் நேற்று முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பல்வேறு அரசு அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். மாநிலம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்கள் அமைந்துள்ள நிலையில் அங்கு விடிய விடிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதேபோன்று ஆர்டிஓ, தீயணைப்பு துறை அலுவலகங்கள், உட்பட அரசு அலுவலகங்களிலும் சோதனை நடைபெறுகிறது.
இந்த சோதனையின் போது லட்சக்கணக்கில் கணக்கில் வராத பணம் சிக்கியதாக தகவல் வெளிவந்துள்ளது. அதோடு பல முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாகவும் ஊழல் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தொடர்ந்து புகார்கள் சென்ற நிலையில் அதன் எதிரொலியாக தற்போது பல்வேறு அரசு அலுவலகங்களில் சோதனை அதிரடியாக நடைபெற்று வருகிறது.