மும்பை விநாயகருக்கு 20 கிலோ தங்க கிரீடம் காணிக்கையாக செலுத்திய ஆனந்த் அம்பானி

- Advertisement -

0

மும்பையில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாள்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நாளை தொடங்குகிறது. இதற்காக கடந்த சில நாள்களாக மும்பை தயாராகி வருகிறது. ராட்சத விநாயகர் சிலைகள் ஊர்வலமாக மண்டல்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு வருகிறது. நாளை தொடங்கும் விழாவிற்காக மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதிக்கு ஆயிரக்கணக்கான சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள லால்பாக்சா ராஜா (Lalbaugcha Raja) விநாயகரை ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம். லால்பாக்சா ராஜா விநாயகர் மும்பையிலேயே அதிக பக்தர்களை கவருவது வழக்கம்.லால்பாக்சா ராஜா நாளை பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட இருக்கும் நிலையில் பத்திரிகையாளர்கள் தரிசனத்திற்காக பிரத்யேகமாக திறக்கப்பட்டது.

- Advertisement -

லால்பாக்சா ராஜா’ விநாயகர் இந்த ஆண்டு 15 கோடி மதிப்புள்ள ராட்சத கிரீடம் அணிவிக்கப்பட்டு காட்சியளித்தார். இந்த ஆண்டு லால்பாக்சா ராஜா மண்டல் காசி விஸ்வநாதர் ஆலயத்தை போன்று வடிவமைக்கப்பட்டு இருந்தது. லால்பாக் ராஜாவை நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் மற்றும் குறிப்பிட்ட சில பக்தர்கள் முதலில் தரிசனம் செய்ததோடு வீடியோ, புகைப்படம் எடுத்தனர். லால்பாக் ராஜாவின் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது.லால்பாக் ராஜாவிற்கு 15 கோடி மதிப்புள்ள 20 கிலோ தங்க கிரீடத்தை பிரபல தொழிலதிபர் ஆனந்த் அம்பானி காணிக்கையாக செலுத்தி இருக்கிறார்.கடந்த 15 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தியின் போது தனது குடும்பத்தோடு வந்து ஆனந்த் அம்பானி லால்பாக் ராஜாவை தரிசனம் செய்வது வழக்கம்.இதனிடையே ஆனந்த் அம்பானியை லால்பாக் ராஜா மண்டல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த தங்க கிரீடத்தை தங்க நகை தயாரிப்பவர்கள் இரண்டு மாதமாக செய்துள்ளனர் என்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.