தூத்துக்குடி பிரையன்ட்நகர் 2ஆவது தெருவைச் சேர்ந்தவர் விநாயகசுந்தரம் (72), இவர் நேற்று முன்தினம் காலை அங்குள்ள பத்ரகாளியம்மன்கோவில் தெருவில் சாலையை கடந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று காலை (ஆக.31) பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.