அகில இந்திய தேவர் குல கூட்டமைப்பு நிமிட தலைவர் சண்முகையா பாண்டியன் படத்திறப்பு விழா!
திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள சங்கீத் மஹாலில் அகில இந்திய தேவர் குல கூட்டமைப்பு நிமிட தலைவர் S.சண்முகையா பாண்டியன் படத்திறப்பு விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் பாரதிய பார்வர்ட் பிளாக் நிறுவனர் கே.ஏ.முருகன் படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் அகில இந்திய முக்குலத்தோர் பாசறை தலைவர் V. G.சிற்றரசு தேவர், முக்குலத்து புலிகள் கட்சித் தலைவர் ஆறு.சரவண தேவர், தென்னாட்டு மக்கள் கட்சி தலைவர் S.கணேச தேவர், முக்குலத்தோர் சட்ட பாதுகாப்பு மைய தலைவர் பசும்பொன் செ.முத்து,IJK தேசிய துணை பொதுச்செயலாளர் ஆனந்த முருகன், சென்னை C. M. T. ராஜா, கோவை நவரச மாத இதழ் (பூபாலன்) வெங்கடேசன், அம்பை தேவர் குல கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் பொன். முருகேசன் மற்றும் சமுதாய தலைவர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை பீமநகர் R. முருகன், G. பூர்ணா குமார் தேவர் மற்றும் குடும்பத்தினர் செய்திருந்தனர்.