ஆந்திராவில் இருந்து வந்த வேளாண்மை அறிவியல் நிலைய பொன்விழா தொடரோட்ட ஜோதி கரூர் வேளாண் அறிவியல் நிலையம் சென்றது..!

- Advertisement -

0

வேளாண் அறிவியல் நிலையம் தொடங்கப்பட்டு 50வது ஆண்டு விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது .இதனை கொண்டாடும் விதமாக, தமிழ் நாட்டில் முதலாவதாக தொடங்கப்பட்டதும், இந்திய அளவில் இரண்டாவதுமான திருச்சிராப்பள்ளி, சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் மாடித் தோட்டம் மற்றும் வீட்டு காய்கறி தோட்டம் பற்றிய பயிற்சி மற்றும் மரம் நடுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப் பாளர் முனைவர் சி.ராஜா பாபு  ஒருங்கிணைத்தார். மேலும் தாய்க்காக ஒரு மரம் இயக்கத்தின் ஒரு பகுதியாக மரம் நடுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

- Advertisement -

வேளாண்மை அறிவியல் நிலையம் துவங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக பொன்விழா ஆண்டு ஜோதி தொடரோட்டம் ஆந்திர மாநிலம் விஜய நகரத்தில் ஆரம்பித்து 71 வேளாண் அறிவியல் நிலையங்கள் கடந்து நவம்பர் 12ஆம் தேதி புதுச்சேரியில் முடிவடைகிறது. இந்த ஜோதி தொடரோட்டம் திருப்பூர் வேளாண்மை அறிவியல் நிலையத்திலிருந்து  சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. இறுதியாக, இந்த ஜோதியானது  கரூர் வேளாண்மை அறிவியல் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பொன்விழா ஜோதியை வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சி. ராஜா பாபு, இணை பேராசிரியர்கள் முனைவர் சு.ஈஸ்வரன், முனைவர் எம்.மாரிமுத்து ஆகியோர் கரூர் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி களிடம் ஒப்படைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.