திருச்சி நீதிமன்றத்திற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு மாவட்ட நீதிபதி எம். கிறிஸ்டோபர் அவர்கள் தலைமையில் 10 வருடங்களுக்குப் பின் இன்று நீதிபதிகள் வழக்கறிஞர்கள் கருத்து கேட்கும் நிகழ்ச்சி (Bench and Bar meeting) திருச்சிராப்பள்ளி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் 300 இருக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை கூறினர்.மதியம் ஒரு மணிக்கு ஆரம்பித்து மூன்று மணி வரை நடைபெற்ற இக்கூட்டத்தில் திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் சுகுமார், குற்றவியல் வழக்கறிஞர் சங்க தலைவர் முல்லை சுரேஷ், செயலாளர் பி.வி. வெங்கட் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர் .